Posts

ஓயாத ஒலிகள்

     பாசம் ஏதும் இல்லாமலே போன உறவு, இரத்த சம்மந்தம் இருந்தும் கூட, ஏனோ அவர்களிடம் செல்ல தாழ் போடும் மனது.     என்றுமே கேட்டிறாத பாச மொழிகள். கேட்டவை அனைத்துமே, ஏச்சுக்களும், பொய்ப் பழிகளும், வீண் பொரணியுமே தவிர வேறெதும் இல்லை.      இருந்தும், அவர்களை தினமும் காணும் சூழ்நிலை,  கண்டும், கண்டிறாது போல், பேசும் ஏழன  சொற்களை கேட்டும் கேட்டிறாது போல் வாழ வேண்டிய கட்டாயம்.      இன்று வரை மரியாதை, வயதிர்காக மட்டுமே ஒழிய வேறெதர்க்கும் அல்ல.    இந்த நிலை மாறும் என ஏங்கி காத்திருந்த எங்களுக்கு, மாற்றம் ஏற்பட்டது, வயதில் மட்டும் தான்.  கருங்கூந்தல்-வெள்ளி நிறம் ஆனது. வீட்டில் குழந்தையாய் தவழ்ந்தவளுக்கும், குழந்தை பிறந்து தவழ்ந்து.  ஆனால் அந்த பெய்யும், வஞ்சனையும் நிறைந்த ஒலிகளோ இன்னும் ஓயவில்லை.      ஓயாத ஒலிகளாய்  இப்பொழுதும்!அதைக் கேட்டுக்கொண்டே, மனதில் எழும் எழுத்துக்களோடு நான்.........           மாற்றம் வந்தால் மறுமொழிக்கலாம், இல்லை மீண்டும் இது போல், ஒரு பக்கத்தை, எ...

நீங்க நல்லவரா? இல்ல கெட்டவரா?

Image
நாம் அனைவருமே பிறந்தது முதல், இரண்டு கேள்விகளுக்கு உள்ளாக்க படுகிறோம்.  நீ நல்ல பிள்ளையா? இல்ல கெட்ட பிள்ளையா? வீட்டிலும் சரி, பள்ளியிலும் சரி, இப்படி  இந்த கேள்விகள் நம்மை சுற்றியே வந்து கொண்டு இருக்கும்.   நல்லது செய்தால் சொர்க்கம் செல்லலாம்,  தீங்கு செய்தால் நகரம் செல்வோம், என்று எப்பொழுதுமே இப்படி பட்ட இரண்டு வேறுபாடுகளுக்கு உள்ளாக்கபடுகிறோம். நாம் அனைவருக்கும், நாம் நல்லவர்களே..  நம் கதைகளுக்கு(வாழ்க்கைக்கு) நாமே கதாநாயகன், கதாநாயகி... யாருக்கும்  தன் வாழ்க்கைக்கு தானே, வில்லனாக இருக்க விருப்பம் இருக்காது.  நாமே கதாநாாயகர்கள், கதாாநாயகிகள், எனவே நாம் சொல்வதும், செய்வதும் எல்லாமும் சரியே! அப்படி ஆனால் நமக்கு தவறு என்று தோன்றுவது, மற்றவருக்கு அது சரி தானே! நோக்கம்,  கொள்கை, வாழ்க்கை முறை,  எதிர்பார்ப்பு, இவையெல்லாம் ஒருவருக்கொருவர் வேறுபட்டதாகவே இருக்கும்.. அதை புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்ள தான் தவறுகிறோம். சரி, தவறு, நல்லவன், கெட்டவன், இத்தகைய பாகுபாடுகள், மற்றவர்களின் உண...

யார் நீ?... ஓ நீங்களா?

Image
சில நேரங்களில் நம் அனைவருக்கும் தோன்றும் பொதுவாக ஒரு விஷயம், ' ஏன் நமக்கு மட்டும் இவ்வளவு  கஷ்டம்! நம்ம யாருக்கு என்ன கெட்டது செய்தோம் ' எவ்வளவு அழுதாலும் இந்த கேள்விக்கு மட்டும் பதில் கிடைக்காது. அழுவதில் ஆறுதல் மட்டுமே கிடைக்கும்.  ஷீமான்  ஹிங்,  இவளது இளம் வயதில் அவள் அடையாாத துன்பங்கள் இல்லை. வாழ்க்கையையே வெறுத்து, குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தால் .  ரயில் தண்டவாளத்தில் தன் குழந்தைகளை தூக்கி வீீசினால், ரயில் வரும் சத்தமும் கேட்டது, அவளும் தண்டவாளம் அருகில் சென்றாள். அப்பொழுது அவள் குழந்தை ஏக்கத்துடன்,  'எப்ப மா வீட்டுக்கு போவோம்? ரொம்ப குளிருது மா!' என்று அந்த மழலை மொழியில் அவளிடம் கேட்டது.  அந்த மழலை வார்த்தை அவளுக்கு ஒரு நம்பிக்கை ஒளியை அந்த இருட்டில் கொடுத்தது.  குழந்தைகளை அழைத்து கொண்டு வீட்டிற்கு கிளம்பினால்.  பெரிய பாடகி ஆக வேண்டும் என்ற  ஆசையிலும், உயிர் வாழ்வதற்காக வேண்டியும் விடாது பாடி வந்தாள்.   வெற்றி அவ்வளவு எளிதில் அவளுக்கு கிடைத்து விடவில்லை....

முதல் சாகசம்

Image
எவ்வளவு  ஆசை பட்டாலும்,  எவ்வளவு காசு கொடுத்தாலும், தலைகீழாக நின்று தவமே செய்தாலும்,   கிடைக்காத ஒரு பொக்கிஷம் குழந்தை பருவம். *மகிழ்ச்சிக்கு எல்லைக் கோடு எதுவும் கிடையாது,  *கூச்சம் இல்லாமல் சத்தமாகவும், மனம் விட்டு சிரிக்கவும் முழு சுதந்திரம்,  *அம்மா அடித்ததும் அழுவதர்க்கு, யாராவது நாம் அழுவதை பார்க்கிறார்களா? என்று எந்த யோசயையும் இல்லாமல் கண்ணீர் கொட்டும்,  ....... அதை சரி செய்ய சாக்லெடும் , அத்துடன் சேர்ந்து அம்மாவின் ஆசை முத்தங்களும்....     இது எல்லாம் போக, நம் கண்கள் ஏனோ எப்போதும் பார்த்துக்கொண்டும், ரசித்துக் கொண்டும் இருப்பது,  அந்த மிதிவண்டி(cycle)  யை தான்...  சும்மா நின்று கொண்டு இருக்கும், அந்த மிதிவண்டியில் ஏறி அமர்ந்து கொண்டு ஓட்டிக்கொண்டு இருக்கும் போது, எப்படியோ வந்து விட்டது அதன் மீது ஒரு காதல்.... ' அப்பா.. வா பா.. எனக்கு cycle ஓட்ட சொல்லிக்கொடு பா ...'   ' அப்புறம் போலாம் .. ' 'இல்ல.. இல்ல... இப்பவே போலாம் பா' 'அக்கா/அண்ணா, நீயாச்சும் சொல்லிக்கொடு please' 'முடியாது போ' உடனே...

முதல் முயற்சி💪

Image
நாம் அனைவரும் தயங்கி நிற்பது, அந்த முதல் முயற்சிக்கே..    சிறு வயது முதற்கொண்டு இந்த பயம் நம்மை துரத்துகிறது...   * நமக்கு ஒரு திறமை இருந்தும்.. *இருப்பதை நாம் உணர்ந்தும்.... *அது நன்றாக தெரிந்ததும்..... *அதனை வெளிக்காட்டும் நேரமோ! வாய்ப்போ! கிடைக்கும் போது நம் தயக்கம், அணைக்கட்டு போல் நம்மை தடுத்து நிறுத்துகி றது.  *யார் என்ன சொல்வார்கள்? *எப்படி கிண்டல் செய்வார்கள்? *நம்மை ஏற்றுகொள்வார்களா? *ஒரு வேலை அவர்களுக்கு பிடிக்காமல் போய் விடுமோ? *நான் எதுவும் தவறாக செய்து விடுவேனோ? இப்படி பட்ட பல கேள்விகள் நமக்குளே எழுகின்றன.... இப்படி பட்ட கேள்விகள் எழுந்ததும், தயக்கம்  கொண்டு முயற்ச்சியை கைவிடுகிறார்கள். 75% பேர்க்கு இப்படி அவர்ளுக்கு உண்டாகும் தயக்கத்தாலும், குழப்பத்தாலும், அவர்களது திறமை வெளிவரமலேயே அவர்களுக்குள் அடைந்து கிடக்கிறது.  இதில் 15% பேர் தயக்கத்தையும், கூச்சத்தையும் தாண்டி முயற்சி செய்கிறார்கள்.  முதல் முயற்ச்சியிலேயே 5% பேர் வெற்றி பெறுகிறார்கள்....

தியாகம்...

Image
*தனக்கு பசித்தாலும், 'எனக்கு போதும் நீ சாப்பிடு' என்று மிச்சப்படுத்தி தன் பிள்ளைகளுக்கு கொடுப்பது, தாயின் தியாகம்.  *தனக்காக ஒரு செருப்பு வாங்க கூட யோசித்து பணத்தை மிச்சப்படுத்துவார், தன் பிள்ளை ஆசை பட்டு கேட்டவுடன் ஆன்ராய்டு போனே,(anroid phone) வாங்கி தருவார். இது தந்தையின் தியாகம்.  தியாகம் என்னும் ஒன்று இந்த உலகில் இல்லை என்றால்,  பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே, இந்த உலகம்  நரகமாகி  போயிரு க்கும் . தியாகிகள் இல்லா உலகம்,  மனம் இல்லா மலர் போன்றது, மகிழ்ச்சி இல்லா வெற்றி போன்றது,  ஒளி இல்லா சூரியன் போன்றது,  தியாகிகள் இல்லா உலகில் உயிர் வாழ இயலாது.  தான், தன் என்னும் எண்ணம் கொண்டிருக்கும் மட்டில் தியாகம் என்னும் பண்பு வளராது.        முதல் உலக போர், நாம் அனைவரும் அறிவோம். போருக்கு முக்கிய காரணம், அமெரிக்காவின் 'லூசிடேனியா'  கப்பல் ஜெர்மனியரா ல் தகர்க்கப்பட்டது .   பயணிகள் அலறியடித்தனர் , உயிர் தெப்பம் வைத்திருந்தவர்கள் கடலில் குதித்தனர். பயணிகள் அங...

அன்புள்ள...

Image
*ஏன் இவ்வளவு லேட்டு?.. *ஏன் சோகமா இருக்க?.... *நா பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன் நீ காதுலயே வாங்கலயா?... *சரி சாப்பிட வா.... *என்ன சிந்தனையிலயே இருக்க?*யார் கூடயும் சண்ட போட்டியா?.. *சரி வந்து சாப்பிடு.. *தலை எதுவும் வலிக்கிதா?... *வேகமா தூங்கு, இன்னைக்கும் போன்-அ (phone) நோண்டிகிட்டே இருக்காத, நைட்டு முழுக்க.. இதில் எந்த கேள்விக்கும் பதில் கிடைக்காது என்று தெரிந்திருந்தும், நம் முகம் சிறிது வாடி இருந்தால் கூட இப்படி பல கேள்விகள எழுந்து கொண்டே இருக்கும். ஏதாவது ஒரு கேள்விக்காவது பதில் கிடைத்து விடாதா! என்ற நம்பிக்கையிலும், தெரிந்தால் நாம் இதை சரி செய்து விடலாமே!!!என்ற பாசத்திலும்... ஆனால் அந்த பாசத்திற்க்கு பதிலாக  கிடைப்பது,  'ஒன்னுமில்ல'... என்று மிக ஆக்ரோஷமாக, பலத்த குரலில் ஒரு பதில்..... அந்த பதிலுக்கும் மனம் வருந்தாமல், 'சரி சாப்பிட வா'..... என்று திரும்பவும் ஒரு அக்கறை... அதையும், 'ஒன்னும் வேண்டா'.... என்று தட்டி உதறிவிட்டு... 'டொப்'..என்று ரூம்முக்குள் சென்று கதவு பூட்டப்படுகிறது. பூட்டிய அறைக்குள்ளே, அமைதியாக சத்தமின...