அன்புள்ள...
*ஏன் இவ்வளவு லேட்டு?..
*ஏன் சோகமா இருக்க?....
*நா பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன் நீ காதுலயே வாங்கலயா?...
*சரி சாப்பிட வா....
*என்ன சிந்தனையிலயே இருக்க?*யார் கூடயும் சண்ட போட்டியா?..
*சரி வந்து சாப்பிடு..
*தலை எதுவும் வலிக்கிதா?...
*வேகமா தூங்கு, இன்னைக்கும் போன்-அ (phone) நோண்டிகிட்டே இருக்காத, நைட்டு முழுக்க..
இதில் எந்த கேள்விக்கும் பதில் கிடைக்காது என்று தெரிந்திருந்தும், நம் முகம் சிறிது வாடி இருந்தால் கூட இப்படி பல கேள்விகள எழுந்து கொண்டே இருக்கும்.
ஏதாவது ஒரு கேள்விக்காவது பதில் கிடைத்து விடாதா! என்ற நம்பிக்கையிலும், தெரிந்தால் நாம் இதை சரி செய்து விடலாமே!!!என்ற பாசத்திலும்...
ஆனால் அந்த பாசத்திற்க்கு பதிலாக
கிடைப்பது, 'ஒன்னுமில்ல'... என்று மிக ஆக்ரோஷமாக, பலத்த குரலில் ஒரு பதில்.....
அந்த பதிலுக்கும் மனம் வருந்தாமல், 'சரி சாப்பிட வா'.....
என்று திரும்பவும் ஒரு அக்கறை...
அதையும், 'ஒன்னும் வேண்டா'.... என்று தட்டி உதறிவிட்டு... 'டொப்'..என்று ரூம்முக்குள் சென்று கதவு பூட்டப்படுகிறது.
பூட்டிய அறைக்குள்ளே, அமைதியாக சத்தமின்றி ஒரு அழுகை....
கதவுக்கு மறுபுறம், நம்மால் தன் மகளுக்கோ/மகனுக்கோ ஆறுதலாக இருக்க முடியவிமுடியவில்லையே, இப்படி எடுத்து எறிந்து பேசுகிறாலே/பேசுகிறானே... என்று அந்த தாயின் கண்ணீீர் துளிகள்.
இரண்டு வெவ்வேறு விதமான வலியும், கண்ணீர் துளிகளும்...
ஆனால் நடுவில் இருப்பது என்னவோ, ஒரு கதவு மட்டும் தான்.
மறுநாள் காலையில், இருவரும் ஒன்றுமே நடக்காதது போல,....
'சாப்பிட்டு போ'....
'இல்ல மா.... லேட் ஆய்டுச்சு.. பாய்'
இப்படி பட்ட ஒரு உறவை எவராலும் தரவும் முடியாது, ஈடு செய்யவும் முடியாது... sorry அம்மா...
நன்றி ❤
-கௌசல்யா சந்திரன்
Comments
Post a Comment
Test