ஓயாத ஒலிகள்
பாசம் ஏதும் இல்லாமலே போன உறவு, இரத்த சம்மந்தம் இருந்தும் கூட, ஏனோ அவர்களிடம் செல்ல தாழ் போடும் மனது.
என்றுமே கேட்டிறாத பாச மொழிகள். கேட்டவை அனைத்துமே, ஏச்சுக்களும், பொய்ப் பழிகளும், வீண் பொரணியுமே தவிர வேறெதும் இல்லை.
இருந்தும், அவர்களை தினமும் காணும் சூழ்நிலை, கண்டும், கண்டிறாது போல், பேசும் ஏழன
சொற்களை கேட்டும் கேட்டிறாது போல் வாழ வேண்டிய கட்டாயம்.
இன்று வரை மரியாதை, வயதிர்காக மட்டுமே ஒழிய வேறெதர்க்கும் அல்ல.
இந்த நிலை மாறும் என ஏங்கி காத்திருந்த எங்களுக்கு, மாற்றம் ஏற்பட்டது, வயதில் மட்டும் தான். கருங்கூந்தல்-வெள்ளி நிறம் ஆனது. வீட்டில் குழந்தையாய் தவழ்ந்தவளுக்கும், குழந்தை பிறந்து தவழ்ந்து. ஆனால் அந்த பெய்யும், வஞ்சனையும் நிறைந்த ஒலிகளோ இன்னும் ஓயவில்லை.
ஓயாத ஒலிகளாய் இப்பொழுதும்!அதைக் கேட்டுக்கொண்டே, மனதில் எழும் எழுத்துக்களோடு நான்.........
மாற்றம் வந்தால் மறுமொழிக்கலாம், இல்லை மீண்டும் இது போல், ஒரு பக்கத்தை, என் மனமொழிகளுக்கு செலவழிக்க வேண்டி இருக்கும்.
பார்க்கலாம், மாற்றம் வாழ்விற்க்கா
அல்ல, அடுத்த பக்கத்திற்க்கா என்று.......!
ஓயாத ஒலிகள்....
-கௌசல்யா சந்திரன்.
Comments
Post a Comment
Test