தியாகம்...

*தனக்கு பசித்தாலும், 'எனக்கு போதும் நீ சாப்பிடு' என்று மிச்சப்படுத்தி தன் பிள்ளைகளுக்கு கொடுப்பது, தாயின் தியாகம். 
*தனக்காக ஒரு செருப்பு வாங்க கூட யோசித்து பணத்தை மிச்சப்படுத்துவார், தன் பிள்ளை ஆசை பட்டு கேட்டவுடன் ஆன்ராய்டு போனே,(anroid phone) வாங்கி தருவார். இது தந்தையின் தியாகம். 


தியாகம் என்னும் ஒன்று இந்த உலகில் இல்லை என்றால்,  பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே, இந்த உலகம் நரகமாகி போயிருக்கும் .
தியாகிகள் இல்லா உலகம், 
மனம் இல்லா மலர் போன்றது,
மகிழ்ச்சி இல்லா வெற்றி போன்றது, 
ஒளி இல்லா சூரியன் போன்றது, 
தியாகிகள் இல்லா உலகில் உயிர் வாழ இயலாது. 
தான், தன் என்னும் எண்ணம் கொண்டிருக்கும் மட்டில் தியாகம் என்னும் பண்பு வளராது. 

    முதல் உலக போர், நாம் அனைவரும் அறிவோம். போருக்கு முக்கிய காரணம், அமெரிக்காவின் 'லூசிடேனியா'  கப்பல் ஜெர்மனியரால் தகர்க்கப்பட்டது.  
பயணிகள் அலறியடித்தனர், உயிர் தெப்பம் வைத்திருந்தவர்கள் கடலில் குதித்தனர். பயணிகள் அங்கும் இங்குமாக கப்பலுக்குள் ஓடிக்கொண்டிருந்தார்கள். 
கப்பல் சிறிது சிறிதாக மூழ்க தொடங்கியது. அக்கப்பலில் ஒரு பணக்கார செல்வந்தரும் இருந்தார், அவரது பெயர், ஆல்பர்ட் வாண்டர்பில்ட் .  அவரிடமும் ஒரு உயிர் தெப்பம் இருந்தது. அதை போட்டுக் கொண்டு குதிக்க தயாரானார். 

அப்போது ஒரு அபாயக் குரல், ஒரு பெண் காப்பாற்றுங்கள், என கதறி அழுது கொண்டு இருந்தால்.

இருப்பது ஒரு தெப்பம்,  யாராவது ஒருவர் தான் தப்பிக்க முடியும். சிறிது சிந்தித்தார், அந்த செல்வந்தர்.

தன் உயிர் தெப்பத்தை அப்பெண்ணிடம் கொடுத்து விட்டார். அவள் அதை போட்டுக் கொண்டு கடலில் குதித்தாள்.

சில நொடிகளில் முழு கப்பலும், மூழ்கி விடும். கப்பலின் மேல் தளத்திற்கு சென்றார் அந்த தியாகி. 
'ஒரு பெண்ணின் உயிரை காப்பாற்றும் மாபெரும் வாய்ப்பை நான் பெற்றேன்' என்று அவர் மனம் 
 பூரித்து போனது, அவரது முகம் மகிழ்சியில் மலர்ந்தது.  
 
'புண்வருவலுடன்  இறப்பை ஏற்றார், அந்த செல்வந்தர்.


இப்படி பட்ட அன்பும், தியாகமும் உள்ள வரையில்,  இவ்வுலகம் அழிந்து போய்விடாது.
                            நன்றி❤
                              -கௌசல்யா சந்திரன் 

Comments

Popular posts from this blog

என் இனிய தனிமையே

யார் நீ?... ஓ நீங்களா?

வறுமை கொடிது