யார் நீ?... ஓ நீங்களா?

சில நேரங்களில் நம் அனைவருக்கும் தோன்றும் பொதுவாக ஒரு விஷயம், 'ஏன் நமக்கு மட்டும் இவ்வளவு  கஷ்டம்! நம்ம யாருக்கு என்ன கெட்டது செய்தோம் '

எவ்வளவு அழுதாலும் இந்த கேள்விக்கு மட்டும் பதில் கிடைக்காது. அழுவதில் ஆறுதல் மட்டுமே கிடைக்கும். 
ஷீமான்  ஹிங், இவளது இளம் வயதில் அவள் அடையாாத துன்பங்கள் இல்லை. வாழ்க்கையையே வெறுத்து, குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தால்
ரயில் தண்டவாளத்தில் தன் குழந்தைகளை தூக்கி வீீசினால், ரயில் வரும் சத்தமும் கேட்டது, அவளும் தண்டவாளம் அருகில் சென்றாள்.

அப்பொழுது அவள் குழந்தை ஏக்கத்துடன்,  'எப்ப மா வீட்டுக்கு போவோம்? ரொம்ப குளிருது மா!' என்று அந்த மழலை மொழியில் அவளிடம் கேட்டது. 
அந்த மழலை வார்த்தை அவளுக்கு ஒரு நம்பிக்கை ஒளியை அந்த இருட்டில் கொடுத்தது.  குழந்தைகளை அழைத்து கொண்டு வீட்டிற்கு கிளம்பினால். 

பெரிய பாடகி ஆக வேண்டும் என்ற ஆசையிலும், உயிர் வாழ்வதற்காக வேண்டியும் விடாது பாடி வந்தாள்.  
வெற்றி அவ்வளவு எளிதில் அவளுக்கு கிடைத்து விடவில்லை. 

பல ஆண்டுகளாக இதே போல் தொடர்ந்து பாடி வந்தாள். ஒரு முறை, வியட்நாமில் ஒரு பெரிய நிறுவனத்தில் பாடுவதர்க்கு வாய்ப்பு கிடைத்தது, தன் திறமையை வெளிக்காட்டும் விதமாக அவளும் நன்றாக பாடினால். 
ஆனால் அந்த நிறுவனத்தின் டைரக்டர், : 'உன்கிட்ட பாடும் திறமையும் இல்ல, அழகும் இல்ல. இப்படி எல்லாம் நீ பாடிக்கிட்டு இருந்தா,  பாடகியாகவும் ஆக முடியாது,  பிழைக்கவும் முடியாது.  ஒரு தையல் மெஷின் வாங்கி தைத்து பிழை' என்றாார். 
ஆனால், ஷீமான் ஹிங் அந்த வார்த்தைகளை கேட்டு துவண்டு போக வில்லை.  மேலும் தன் திறமையை வளர்த்துக் கொள்ள முடிவு செய்து, விடாமல் பாடினால். 

பின்பு பல ஆண்டுகளுக்கு பின், உலக புகழ்பெற்ற பாடகி ஆனார்.  
ஒரு முறை மீண்டும், அந்த பெரிய நிறுவனத்தில், ஷீமான் ஹிங் பாட வேண்டி இருந்தது.  அப்பொழுது அந்த டைரக்டர்,  அவளது பாடலையும்,  அவளது குரலையும்,  அழகையும் புகழ்ந்து தள்ளினார்.

அந்த டைரக்டர்,  தீடீரென , ஷீமான் ஹிங்கிடம், தங்களை எங்கோ பார்த்தது போல் இருக்கிறது என கேட்க, 
'ஆமாம், இதே நிறுவனத்தில் தான் பல ஆண்டுகளுக்கு முன்பு நான் வாய்ப்பு கேட்டு வந்த போது, நீ பாடி எல்லாம் சாதிக்க முடியாது, உன்னிடம் அழகும் இல்லை, திறமையும் இல்லை. தையல் மெஷின் வாங்கி தைத்து பிழைக்க சொன்னீங்க' என்றாள். 
இதை கேட்டதும் அந்த டைரக்டர் அடைந்த வெட்கத்திற்க்கும், வியப்பிற்க்கும் அளவே இல்லை. 
                          நன்றி ❤
                              -கௌசல்யா சந்திரன் 



Comments

Popular posts from this blog

என் இனிய தனிமையே

வறுமை கொடிது