முதல் முயற்சி💪
நாம் அனைவரும் தயங்கி நிற்பது, அந்த முதல் முயற்சிக்கே..
சிறு வயது முதற்கொண்டு இந்த பயம் நம்மை துரத்துகிறது...
*நமக்கு ஒரு திறமை இருந்தும்.. *இருப்பதை நாம் உணர்ந்தும்....
*அது நன்றாக தெரிந்ததும்.....
*அதனை வெளிக்காட்டும் நேரமோ! வாய்ப்போ! கிடைக்கும் போது நம் தயக்கம், அணைக்கட்டு போல் நம்மை தடுத்து நிறுத்துகிறது.
*யார் என்ன சொல்வார்கள்?
*எப்படி கிண்டல் செய்வார்கள்?
*நம்மை ஏற்றுகொள்வார்களா?
*ஒரு வேலை அவர்களுக்கு பிடிக்காமல் போய் விடுமோ?
*நான் எதுவும் தவறாக செய்து விடுவேனோ?
இப்படி பட்ட பல கேள்விகள் நமக்குளே எழுகின்றன.... இப்படி பட்ட கேள்விகள் எழுந்ததும், தயக்கம் கொண்டு முயற்ச்சியை கைவிடுகிறார்கள். 75% பேர்க்கு இப்படி அவர்ளுக்கு உண்டாகும் தயக்கத்தாலும், குழப்பத்தாலும், அவர்களது திறமை வெளிவரமலேயே அவர்களுக்குள் அடைந்து கிடக்கிறது.
இதில் 15% பேர் தயக்கத்தையும், கூச்சத்தையும் தாண்டி முயற்சி செய்கிறார்கள்.
முதல் முயற்ச்சியிலேயே 5% பேர் வெற்றி பெறுகிறார்கள். அந்த வெற்றி சிலருக்கு உத்வேகத்தை கொடுக்கிறது. மேலும் தன் திறமையை வளர்க்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் பலர் வெற்றி எளிதில் கிடைத்து விட்டது என்று, ஆணவ கிரிடத்தை சூடி கொள்கிறார்கள்.
ஆனால் முதல் முயற்சியில் தோல்வி அடைந்த 10% பேர், அடுத்து முயற்சி செய்வதற்கு முன்வருவதில்லை.
காரணம்: தோல்வியை தாங்கி கொள்வதற்கும், ஏற்று கொள்வதற்கும் மனம் இல்லாமல், துவண்டு போகிறார்கள்.
தன்னிடம் எந்த திறமையும் இல்லை என்று முடிவு செய்கிறார்கள். திரும்பவும் முயர்சி செய்ய தயக்கம் காட்டுகிறார்கள்.
இப்படி அவர்களே, அவர்கள் மீது நம்பிக்கை இழந்த அந்த தருணத்தில், அவர்கள் எதிர்பார்ப்பது ஒன்று தான், 'உன்னால் கண்டிப்பாக முடியும்' என்ற நம்பிக்கையான வார்த்தை தான்.
அந்த சிறு வார்த்தை பலரது வாழ்வை திருப்பி போட்டிருக்கிறது.
ஒவ்வொரு தோல்வியிலும், ஒவ்வொரு அனுபவம் கிடைக்கிறது. இந்த அனுபவம் மூலம் நம் திறமையை வளர்த்துக் கொள்ள அதிகம் முயற்சி செய்ய முடியும். கடும் உழைப்பிற்கு பலன் கண்டிப்பாக உண்டு, இதில் மாற்றமே இல்லை.
ஊழையும் உப்பக்கம் காண்பர்
உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.
-மனம் தளராது முயற்சி செய்பவன், தனக்கு தடையாய் இருக்கும் விதியையும் தோல்வியுறச் செய்வான்.
முதல் முயற்சியிலேயே, ஒரு வேலை வெற்றி கிடைத்திருந்தால் இப்படி பட்ட அனுபவமும் கிடைத்திருக்காது, தன்னம்பிக்கையும் வளர்ந்திருக்காது.
"தோல்விகளும், துன்பங்களுமே, நமது நண்பர்கள்."
-தொடரும்
நன்றி ❤
-கௌசல்யா சந்திரன்
Comments
Post a Comment
Test