நீங்க நல்லவரா? இல்ல கெட்டவரா?
நாம் அனைவருமே பிறந்தது முதல், இரண்டு கேள்விகளுக்கு உள்ளாக்க படுகிறோம்.
வீட்டிலும் சரி, பள்ளியிலும் சரி, இப்படி இந்த கேள்விகள் நம்மை சுற்றியே வந்து கொண்டு இருக்கும்.
நல்லது செய்தால் சொர்க்கம் செல்லலாம், தீங்கு செய்தால் நகரம் செல்வோம், என்று எப்பொழுதுமே இப்படி பட்ட இரண்டு வேறுபாடுகளுக்கு உள்ளாக்கபடுகிறோம்.
நாம் அனைவருக்கும், நாம் நல்லவர்களே..
நம் கதைகளுக்கு(வாழ்க்கைக்கு) நாமே கதாநாயகன், கதாநாயகி...
யாருக்கும் தன் வாழ்க்கைக்கு தானே, வில்லனாக இருக்க விருப்பம் இருக்காது.
அப்படி ஆனால் நமக்கு தவறு என்று தோன்றுவது, மற்றவருக்கு அது சரி தானே!
நோக்கம், கொள்கை, வாழ்க்கை முறை, எதிர்பார்ப்பு, இவையெல்லாம் ஒருவருக்கொருவர் வேறுபட்டதாகவே இருக்கும்..
அதை புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்ள தான் தவறுகிறோம்.
சரி, தவறு, நல்லவன், கெட்டவன், இத்தகைய பாகுபாடுகள், மற்றவர்களின் உணர்ச்சிகளையும் மதிக்க வேண்டும் என்ற அடிப்படையான விஷயத்தை மறக்க செய்கிறது.
"பாவத்தை வெறுப்பாயாக, ஆனால் பாவம் செய்பவரை வெறுக்காதே"
நன்றி ❤
-கௌசல்யா சந்திரன்
Comments
Post a Comment
Test