முதல் சாகசம்
எவ்வளவு ஆசை பட்டாலும், எவ்வளவு காசு கொடுத்தாலும்,
தலைகீழாக நின்று தவமே செய்தாலும், கிடைக்காத ஒரு பொக்கிஷம் குழந்தை பருவம்.
*மகிழ்ச்சிக்கு எல்லைக் கோடு எதுவும் கிடையாது,
*கூச்சம் இல்லாமல் சத்தமாகவும், மனம் விட்டு சிரிக்கவும் முழு சுதந்திரம்,
*அம்மா அடித்ததும் அழுவதர்க்கு, யாராவது நாம் அழுவதை பார்க்கிறார்களா? என்று எந்த யோசயையும் இல்லாமல் கண்ணீர் கொட்டும், ....... அதை சரி செய்ய சாக்லெடும், அத்துடன் சேர்ந்து அம்மாவின் ஆசை முத்தங்களும்....
இது எல்லாம் போக, நம் கண்கள் ஏனோ எப்போதும் பார்த்துக்கொண்டும், ரசித்துக் கொண்டும் இருப்பது, அந்த மிதிவண்டி(cycle) யை தான்...
சும்மா நின்று கொண்டு இருக்கும், அந்த மிதிவண்டியில் ஏறி அமர்ந்து கொண்டு ஓட்டிக்கொண்டு இருக்கும் போது, எப்படியோ வந்து விட்டது அதன் மீது ஒரு காதல்....
'அப்பா.. வா பா.. எனக்கு cycle ஓட்ட சொல்லிக்கொடு பா ...'
'அப்புறம் போலாம் .. '
'இல்ல.. இல்ல... இப்பவே போலாம் பா'
'அக்கா/அண்ணா, நீயாச்சும் சொல்லிக்கொடு please'
'முடியாது போ'
உடனே வந்து விடுமே, அடங்காத அருவியாய் அழுகை...
'சரி சரி வரேன் அழுகாத' என்று கிளம்பி விடுவார் அப்பா...
காலை தரையில் வைக்க கூட எட்டாது , அப்பா பிடித்திருக்க, அவர் மேல் ஒரு பக்கம் சாய்ந்து கொண்டு, cycle யும் சாய்த்துக் கொண்டு... ஓட்டி விட்டு
வீட்டிற்கு வந்ததும், ஏதோ சாதித்து விட்டது போல் ஒரு மகிழ்ச்சி.
ஆனால் இந்த ஆசைக்கு முடிவும் இல்லை, முழுதாக கற்றுக்கொடுக்காமல் அப்பாவிற்கு விடுதலையும் இல்லை.
அப்பா வீட்டிற்கு உள்ளே வந்ததும், cycle-ஐ எடுத்துக் கொண்டு தயாராக நிற்போம்.
நாம் எவ்வளவு தூரம் ஓட்டினாலும் cycle-ஐ பிடித்துகொண்டு நடந்தே வருவார், பொறுமையாக....
'அப்பா... விட்ராதிங்க... பிடிச்சுக்கோங்க..'
'சரி சரி, நீ ஆடாம , திரும்பாம ஓட்டு'
சரி என்று கவனமாக ஓட்ட முயற்சி செய்து, தெரு கடைசியை நெருங்கும் போது, ஒரு சந்தேகம்.. லேசாக திரும்பி பார்த்தால், தெருவின் மறு முனையில் நின்று கொண்டு இருப்பார்.
எப்படி ஓட்டினோம் என்றே புரியாது..!
தெருவின் மறு முனைக்கு திரும்பி செல்வதற்குள், 10 முறை break போட்டு, தரையை தேய்த்துக் கொண்டு சென்று,
'அப்பா.. ஏன் பா, கூட வரல?'
' அதான் நீயே ஓட்டுனேல.. ஆவலோ தான்'....
ஒருவழியாக அப்பாவிற்கு விடுதலை.....
பள்ளி விட்டு வந்ததும், uniform-ஐ கூட கழட்ட நேரம் இல்லாமல், நேராக cycle-ஐ நோக்கி.... எப்படியாவது இன்னும் சரியாக ஓட்டனும்... என்று ஓட்டுவோம்... ஆனால் விளைவு முதல் புதையல்.. ஆம்.. அது தான் நம் முதல் பொக்கிஷம்...
அப்பாடா.. ஒரு வழியா cycle ஓட்டி பழகியாச்சு..
அடுத்து, கொலம்பஸ் இந்தியாவை கண்டுபிடிக்க கிளம்பி, அமெரிக்காவை கண்டு பிடித்ததை
போல, நாமும் ஏதோ ஒரு தெருவுக்குள் சென்று, பல வழிகளை கண்டு பிடித்து எப்படியோ வீடு வந்து சேர்ந்து, சாதனைகள் செய்வோம்...
அடுத்ததாக சாகசங்கள் தொடங்கும்...
*cycle ஓட்டியாச்சு அடுத்து doubles!, அதுக்கு ஒரு ஆளை பிடிச்சு, நம்ம சாகசங்களை காட்டி, இரண்டு பேரும் சேர்ந்து கீழே விழுந்து, புதையல் வாங்கனும்.
*அடுத்த சாகசம், ஒரு கையை விட்டு ஓட்டனும்...
*அடுத்ததாக, இரண்டு கையையும் விட்டு ஓட்டனும்...
Captain America, iron man, spider man, thor... இவர்கள் சாகசங்களை விட, நம் cycle சாகசங்கள் பல விதங்களில் உயர்ந்தவையே...
நன்றி ❤
-கௌசல்யா சந்திரன்
Comments
Post a Comment
Test