வறுமை கொடிது

கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை...
 உணவு, உடை, இருப்பிடம், இவற்றின் பற்றாக்குறையை கொண்டே, வறுமை தீர்மாக்கப்படுகிறது. மக்கள் தொகையின் பெருக்கம் வறுமைக்கு முதல் காரணம் ஆகிறது.

 வறுமை, ஒரு மனிதனின் எதிர்காலத்தை, முழுவதுமாக மாற்றி அமைக்கிறது.  
        திருடனாக மாற்றுகிறது,
        தவறு செய்ய தூண்டுகிறது,
காரணம்: வறுமையினால் அவன், இந்த சமுதாயத்தில் எதிர்கொண்ட அவமானங்களும், அவமதிப்புகளும். 

      
  தன்னிடம், இல்லாத ஒன்று மற்றவர்களிடத்தில் இருப்பதை காணும் போது ஏற்படும் ஏக்கம், தாழ்வு மனப்பான்மை, இவையும் ஒருவனுக்கு, உலகத்தின் மீதும், பணத்தின் மீதும் வெறுப்புணர்வை ஏற்பட செய்கிறது. 
   
 இன்றைய காலகட்டத்தில் வேலையின்மையே,  வறுமைக்கு  மிக முக்கிய காரணங்களுள் ஒன்றாக இருக்கிறது. 
        வருடம், வருடம் படித்த பட்டதாரிகள், பலர் லட்சக்கணக்கில் 
 படித்து முடித்து விட்டு, இந்த சமுதாயத்தில் அடி எடுத்து வைக்கிறார்கள். 
      வேலையும், தான் படித்த  படிப்பிற்க்கு ஏற்ற அங்கீகாரமும் கிடைக்காததால், பிறந்ததே வீீீண் என துக்கத்தில் மூழ்கிறார்கள்.

     உலக வரலாற்றில்,  பல தலைவர்களும், மேதைகளும், தங்களது வாழ்வை வறுமையிலேயே தொடங்கினார்கள். பின்பு அவர்களது வாழ்க்கையையும், உலக வரலாற்றையுமே  மாற்றி அமைத்தாார்கள்.

ஹிட்லர்:
  
  வியட்நாமில்,  தெருக்களில் வர்ணம் தீட்டி வாழ்ந்து வந்தார்.  பின்பு  ஜெர்மனியின் சர்வாதிகாரியாக மாறி, உலகத்தையே ஆச்சரியப்பட வைத்தார். 

ஆப்ரகாம் லிங்கன்:
          புத்தகம் வாங்குவதற்காக வெகு தூரம் நடந்தே சென்று,  வாங்கி வந்து, அடுப்பு வெளிச்சத்தில் அமர்ந்து படிப்பார்.
பின் காலத்தில், அமெரிக்காவின் அதிபராக இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார், ஏழை விறகு வெட்டியின் மகன்.

விட்ரோ வில்ஸன்:
     விட்ரோ வில்ஸன் ஏழை ஆசியராக வேலை செய்து வந்தார்.   நல்ல உடைகள் வாங்க கூட போதுமான பணம் இருக்காது. வாங்கும் வருமானம் குடும்ப செலவிற்கே சரியாக இருக்கும்.  ஆனால் பின் நாட்களில், அவர் அமெரிக்க அதிபர் ஆனார்.

எடிசன்:
     ரயில் வண்டியில்,பத்திரிகை விற்பனை செய்து கொண்டு இருந்தார். ரயிலில் உள்ள ஒரு பெட்டியில் தான்,  தன் ஆராய்ச்சியை மேற்கொண்டு வந்தார். 
மின்சார விளக்கும், மின்விசிறியும் இன்று நம்மை சுற்றி இருப்பதர்க்கு காரணமாக திகழ்ந்தவர். 

மேரி க்யூரி:
     வேலைக்காரியாக இருந்தார், அவர் தங்கியிருந்த அரையில் சிறு வெளிச்சம்  கூட வராது. குளிர் தாங்க முடியாது.  பாரிஸ் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது,  ஒரு நாள் பசி தாங்காமல் மயங்கியே விழுந்தாார். இருப்பினும் அவர் ஆராய்ச்சியை அவர் கைவிடவில்லை. அவரது கடின உழைப்பின் மூலம், (1903, 1911)  இரு முறை நோபல் பரிசு பெற்றார். 

பாரதி:
 
    அன்று பாரதியை ஒரு சிலரே அறிவார்.  ஆனால் இன்றோ உலகமே தன்னுடைய கவி சக்கரவர்த்தி என்று பெருமை கொள்கிறார்கள். 

  இவ்வாறு வறுமையை கருதாமல்  , தன் லட்சியத்தையும், தீராத நோக்கத்தையும் கொண்டு, வெற்றியை தன் வசமாக மாற்றினார்கள்.  வறுமையை காரணம் கொண்டு அவர்கள் முடங்கி விடவில்லை.   வறுமையையே, தன் லட்சியத்தை அடைவதற்கான முதல் படியாக நிர்ணயத்துக் கொண்டு முன்னேறி சென்றார்கள்.  
    
       அவர்களால் முடியும் என்றால்,  நம்மாலும் முடியும்., என்பதற்கு அவர்களே சிறந்த எடுத்துக்காட்டு. 

                             நன்றி ❤
                              -கௌசல்யா சந்திரன் 

Comments

Popular posts from this blog

என் இனிய தனிமையே

யார் நீ?... ஓ நீங்களா?