என் இனிய தனிமையே
தனிமை.....
நாம் எதிர்பாராத நேரத்தில், நம்மிடம் வந்து கைக்கோர்க்கும்.
அதை நாமே இஷ்ட்டப்பட்டு எடுத்துக் கொண்டால், அதை விட பேரின்பம் வேறு எதுவும் இருக்க முடியாது.
அதுவே, பிறர் மூலமோ! அல்லது சூழ்நிலையோ, நம்மை தனிமையில் தள்ளினால் அதை விட கொடுமை வேறு எதுவும் இருக்க முடியாது.
இங்கு, அதிக நேரம் சமூக வலைதளங்களில் தங்கள் நேரத்தை செலவு செய்பவர்கள் (80-90% ), தங்கள் தனிமையை போக்கிக் கொள்வதர்க்காகவே!
தனிமை, பைத்தியம் ஆக்குகிறது என்று, ஒரு துணையைத் தேடிக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள், துணையை தேடி பிடித்து, பின்பு முழு பைத்தியமாக மாறி நிற்கிறார்கள்.
சில நேரங்களில், நம்மை சுற்றி பெரிய கூட்டமே இருந்தாலும், தனிமையை உணர்வோம். இப்படிப்பட்ட தனிமையை தவிர்க்க முடியாதது.
சிலர் தங்களது உடல் உருவத்தின் மீதும், நிறத்தின் மீதும், வெறுப்புடன் இருப்பார்கள்.
சுற்றி இருப்பவர்கள், தங்களை கிண்டல், கேளி செய்து விடுவார்களோ? என்ற பயத்தில் தனிமையில் இருக்கத் தொடங்குகிறார்கள்.
இப்படிப்பட்ட கசப்பான அனுபவங்களை, பொதுவாக நம்மில் பலர் பள்ளி நாட்களில் கடந்து தந்திருப்போம்.
*காதல் தோல்வி, *நெருக்கமானவர்களின் மரணம், *நண்பர்களின் துரோகம், *வறுமையினால் உண்டாகும் தனிமை, இப்படிப்பட்ட தனிமையில் இருப்பவர்கள், அதிலிருந்து மீண்டு வருவது மிகவும் கடினம். ஆனால் மாற்றம், அவர்களே எண்ணினால் மட்டுமே சாத்தியம்.
நாம் அனைவருமே நிச்சயமாக, இதில் ஏதோ ஒரு தனிமை நிலையை கடந்து தான் வந்திருப்போம். அல்லது, இப்பொழுது அனுபவித்துக் கொண்டு இருப்போம்.
இப்படி பட்ட தனிமையில் இருப்பவர்கள், தங்களை எப்பொழுதும் தனிமை படுத்திக் கொள்வார்கள். முகம் வாடியே இருக்கும். ஆனால் சில நேரங்களில் அதிகமாக சிரிப்பார்கள். இதற்கு மருந்தும், மருத்துவமும் உதவிட முடியாது. நண்பர்களிடம் மனம் விட்டு பேசினாலே, பாதி மன கவலை சென்று விடும்.
*தனிமையில் தான் கடவுளை உணர முடியும்.
*தனிமையில் தான் நமக்கு எது தேவை, என உறுதி படுத்திக் கொள்ள முடியும்.
*தனிமையில் தான் நம்மை சுற்றியுள்ள இயற்கையை ரசிக்க முடியும்.
இப்படி ஆகிவிட்டதே! என்று அழுது, அழுது நேரம் கழிப்பதா?
இல்லை
சரி, நடந்தது நன்மைக்கே, அடுத்து என்ன செய்யலாம்?
என்று யோசித்து அடுத்த கட்டத்திற்கு செல்வதா?
என்று தீர்மானித்துக் கொள்வது, அவரவர் முடிவில் தான் உள்ளது.
இடும்பைக்கு இடும்பை படுப்பர்
இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.
துன்பம் வரும் போது அதற்காக வருந்திக் கலங்காதவர், அந்த துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்.
நன்றி ❤

Comments
Post a Comment
Test