உழைப்பே உன்னை உயர்த்தும்

எதற்காக உழைக்க வேண்டும்?

*வாழ்வதற்காக,
*உண்பதற்காக,
*உடுப்பதற்க்காக,
*நல்ல இருப்பிடத்தில் குடியிருக்க,
*சமுதாயத்துடன் இணைந்து வாழ,
*கடவுளுக்கு தொண்டு செய்ய, 
*சேவை செய்ய, 
*நேரத்தை செலவு செய்ய,
*நிர்வாகிக்க.

"உழைப்பில் உறுதி கொண்டு வாழ்நாளை பயனுள்ளதாக மாற்றுங்கள். உலகில் பிறந்ததற்கு அறிகுறியாக ஏதாவது நல்ல செயலை செய்து, உங்கள் அடையாளத்தை உலகில் விட்டுச் செல்லுங்கள். "
                                          -விவேகானந்தர் 
  விதை வைத்த அடுத்த நாளே, அது வளர்ந்து பெரிய மரமாக மாறுவது இல்லை. 
  அது போல் தான் உழைப்பும், தினமும் கடினமாக உழைக்க, உழைக்க அது பெரும் பலனை நமக்கும், நம்மை சார்ந்தவர்களுக்கும் கொடுக்கிறது. 

ஐசக் நியூட்டன்:

  20 வருடங்களாக, தொடர்ந்து ஆராய்ச்சி செய்து,  அதை அனைத்தையும் பேப்பர்களில் குறித்து வைத்திருந்தார். ஒரு நாள் அவர் வெளியில் சென்று இருந்த வேலையில், அவரது பூனை விளக்கு ஒன்றை தட்டி விட்டு, அனைத்து பேப்பர்களும் எரிந்து சாம்பலாயின, அவர் திரும்பி வந்து பார்த்ததும், அதிர்ச்சி அடைந்தார், மனம் கலங்கினார், ஆனால் துவண்டு போக இல்லை, அவரது பூனை மீதும் வெறுப்புக் கொள்ள வில்லை. 
மீண்டும் ஆராய்ச்சிகளை தொடங்கினார்.

  நோக்கம் இல்லாமல் கடுமையாக உழைத்தால், வெற்றியை ருசிக்க முடியாது. தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாது. 

   இங்கு படங்களில் காட்டப்படுவது போல, ஒரே நாளில், ஒரே பாட்டிில் சாதித்து, பணக்காரன் ஆவது எல்லாம் சாத்தியம் இல்லாதது.
   லட்சியம் கொண்டு, கடுமையாகவும், சந்தோஷமாகவும், நம்மை வருத்திக் கொண்டும், உலகமே நம்மை தூற்றினாலும்
, நம் நோக்கத்தில் தீராத வேட்கை கொண்டு உழைக்க வேண்டும். 
மருத்துவர் சுப்பாராவ்:

   பள்ளிப்படிப்பில் மூன்று முறை தோல்வி அடைந்து, கடைசியாக தேர்ச்சி பெற்றார்.  பின்பு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்.
ஆனால் தேர்வில் வெற்றி பெற வில்லை. ஆனால் HARVARD பல்கலைக்கழகத்தில் சேர்ந்து முழு நேர ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
அதன் விளைவாக ஆரோமைசின்   என்ற நுண்ணுயிர்  எதிரியை 1948ல் கண்டறிந்தார். மருத்துவத்தில் பட்டயம்(L.M.S)கிடைக்த்தது.

   உழைப்பில் தோல்வியும், வெற்றியும் ஒரு ஒரு அங்கங்களே.!

கணித மேதை ராமானுஜம்:
     பல்கலைக்கழக தேர்வில் தோல்வி  அடைந்தார். பின்பு எழுத்தாளராக தன் வாழ்வை தொடங்கினார்.  அதே நேரத்தில்  கணிதத்தில் தனது ஆராய்ச்சியை இடைவிடாது செய்து, வெற்றி கண்டார். 
  
     உழைப்பதற்கு வயது தேவையில்லை. மனம், இளமையாகவும், புத்துணர்ச்சி கொண்டதாகவும்,  நோக்கம் கொண்டதாகவும் இருந்தாலே, போதுமானது.
வை.மு. கோதைநாயகி அம்மாள்:
    
        ஐந்து வயதிலே திருமணம் ஆனது. பள்ளிக்கூடம் சென்றதே இல்லை. கணவனின் உதவி கொண்டு எழுத, படிக்க கற்றுக் கொண்டார். இடைவிடாது உழைத்தார்,  115 புத்தகங்கள் எழுதினார். 35 வருடங்கள், மாத இதழ் ஒன்றையும் நடத்தி வந்தார். 


   உழைக்கும் வயதிலே (இளம் வயதில்) நோக்கம் கொண்டு கடுமையாக உழைத்தோமே ஆனால், பிற்கலத்தில் மகிழ்ச்சியாக வாழ முடியும்.  சோம்பேறித்தனமாக இருந்து நாள் கடத்தினால் , பிற்காலத்தில் நம்மை சார்ந்தவர்களுக்கு நாம் பாரமாக தான் இருப்போம். 

    கடுமையான உழைப்பே, நம்மை கடவுளிடம் இட்டுச் செல்லும். 


  திறமை +உழைப்பு + விடாமுயற்சி
இம்மூன்றுமே, ஒருவனை உயர்த்தும். 

                             நன்றி❤
                                   -கௌசல்யா சந்திரன் 


    

Comments

Popular posts from this blog

என் இனிய தனிமையே

யார் நீ?... ஓ நீங்களா?

வறுமை கொடிது