டிக் டிக் டிக்

நேரம்⏰:

 நேரம் என்பது ஒரு வளம், அதை வாங்கவோ, சேமிக்கவோ, வாடகைக்கு பெறவோ , முடியாத பொக்கிஷம். 

 
 ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி  கிடைக்கும் பொதுவான ஒன்று. 

நல்ல நேரம்:

  இங்கு நாம் சிந்திக்க தொடங்கும் நேரமே, நல்ல நேரம். 

   இது சொல்வதர்க்கு எளிமையாக இருக்கலாம்,  ஆனால் இதை வாசித்து கொண்டு இருக்கும் இந்த தருணத்தில் கூட பலர் மறைந்து கொண்டு இருக்கிறார்கள்.
அப்படி இருக்க நாம் உயிரோடு இருக்கும் ஒரு ஒரு நொடியும் நமக்கு நல்ல  நேரமே.

   நாமும் அந்த வரிசையில் ஒரு நபர் தான். 
  நம்முடைய நேரம் வரும் வரையில், நாம் நம் நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டால், நம் நேரம் முடிந்த பின்பும் கூட, உலகம் நம் பெயரை உரைக்கச் சொல்லும்.
கொட்டும் அருவியை!

 

   நம் நேரத்தை கட்டுப்படுத்தவும், வரையறுக்கவும், நம்மால் மட்டுமே முடியும்.  
  நேரம் என்பது நிற்காமல் கொட்டும் அருவி போன்றது. அது தெப்பமாக என்றுமே தேங்கி நிற்காது.
 ஜப்பானில் தொழிலாளர்கள் இரவில் ஊர்வலம் போனார்களாம். ஏன்?  என்று கேட்டதற்கு, தொழிலாளர்கள் பகலில் ஊர்வலம் போனால் உற்பத்தி  என்னாவது?. என்றார்களாம். 
 ஜப்பானியரின் தேசபக்தி, உலக மார்க்கெட்டில் ஜப்பானியப் பொருள்களை கொண்டு குவிக்கிறது.
 நம்மில் பத்தில் ஒரு பங்கு கூட இல்லாத நாடு, நம்மைவிடப் பத்து மடங்கு விஞ்சி நிற்கிறது.
  காரணம், அவர்கள் 24 மணி நேரம் போதவில்லை! என்ற மனப்பான்மை கொண்டவர்கள். 

மாய உலகிலே, அயராத வேலை:

 இங்கு பல வாய்ப்புகளும், நேரமும்,  நம் முன்னே தாயாராக நன்று கொண்டே தான் இருக்கிறது.
 நாம் தான் அதை பயன்படுத்திக் கொள்ள தயாராக இல்லை. 
 பொழுதுபோக்கிக் கொண்டும், நிரந்தரம் இல்லாத சில மாய உலகிலும் மிதந்ததுக் கொண்டும், நாம் அன்றாடம் பரபரப்பாக திரிகின்றோம்.

 நம்மை பயன்படுத்தி பல முதலாளிகள், இப்படி ஒரு மாய உலகில் நம்மை மிதக்க வைத்து அவர்கள் சம்பாதிக்கிறார்கள்.  

 இது  நன்றாக தெரிந்தும், நாம் அதில் இருந்து வெளி வர முயற்சி செய்வது இல்லை.
"நாம் தானே முட்டாள்  அப்போது!"

தடைகளை தாண்டலாம்

  1.உங்களை பாதிக்க கூடிய நேரத்தை, வீணாக்கும் காரணிகளை பட்டியவடுங்கள்.

 2.ஒவ்வொரு காரணியிலும் நேரத்தை வீணாக்குவது யார் என்று இனங்காணுங்கள்.

  3.நீங்களா? மற்றவர்களா? 
     பின்னர் தவிர்ப்பு நடவடிக்கைக்கு திட்டமிடுங்கள்.
   4.ஒரு நேரத்தில், ஒரு வேலையை மட்டும் செய்வதற்க்கு உங்களை பழக்கிக்கொள்ளுங்கள்.
  
  5.அது வரையில், மற்ற வேலைகளில், ஆட்படுத்திக் கொள்ளாதீர்கள்.

நோக்கமே முதன்மையானது:

   நோக்கம்  அனைத்திற்கும் முதல் படி. நோக்கம் நிற்னயிக்கப்பட்டால் நாம், நம் நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியும். 
 சரி... நான் என் நோக்கத்தை நிர்ணயித்து விட்டேன்... என் வெற்றி எங்கே? இன்னும் கிடைக்க வில்லை?
     ஒரே நேரத்தில்,  ஒரே நொடியில்,  முடிவு செய்து விட்டதும், வெற்றி  பேற முடியாது. 
அது  ஒரு நீண்ட பயணம். 
ஒரு ஒரு நொடியும், துவண்டு விடாமல் தொடர்ந்து உழைக்க வேண்டும்.  
முதல் படி:

  
 முதல் படி என்றுமே கஷ்டமானதாகவே தான் இருக்கும். 
அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து நோக்கத்தோடு செயல்பட வேண்டும். 
   நல்ல விதங்களிலும், நல்ல  விஷயங்களிலும் நேரங்களை செலவிட தொடங்கினால், அது ஒரு பழக்கமாக  மாறிவிடும். 
 
  பின்பு, மாற்றங்கள் தானே நிகழ தொடங்கும். 

                                நன்றி ❤
       
    
                                   -கௌசல்யா சந்திரன் 



Comments

Popular posts from this blog

என் இனிய தனிமையே

யார் நீ?... ஓ நீங்களா?

வறுமை கொடிது