உன்னை நீ அறிவாய்
நான் யார்?
மனிதன் அறிய வேண்டிய அறிவுகளிலெல்லாம் முதன்மையானது தன்னை அறிதலே😇
பிறந்தோம், இறந்தோர் என்று இல்லாமல், 'ஓவ்வொரு ஜீவனும் , ஓவ்வொரு லட்சியத்திற்காகவே படைக்கப்பட்டு இருக்கின்றன ' - என்று அறிந்தும், உணர்ந்தும் வாழ்வோர் சிலரே...
"தமிழில், எல்லா சொல்லுக்கும் பொருள் உண்டு" என்று ஒரு சூத்திரம் உண்டு.. அது போலவே எல்லா ஜீவனுக்கும் காரணம் உண்டு.
சேரிடம் அறிந்து சேர்:
இங்கு யாரும் மாயக்கண்ணாடி அணிந்து கொண்டும், மனதை படிக்கும் வித்தையை தெரிந்து கொண்டும் வாழ வில்லை. போகின்றபோக்கில் உண்டாகும் அறிமுகங்களை நம்பியும், நம்பாமலும் வாழ்கின்றோம்.
நாமே இங்கு நம்மிடம் நடித்து கொண்டிருக்கும் நிலையில், மற்றவர்களிடம் உண்மையை எதிர்பார்ப்பது சாத்தியமில்லாதது.
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு.
_ திருக்குறள்
நண்பர்கள் செய்யும் தவறுகளை, இது தவறு என்று, எடுத்து சொல்லி தவறுகளை திருத்திக்கொள்ள உதவி செய்வதே உண்மையான நட்பு.
கோபத்திற்கு காரணம்:
1.ஆசை
2. காமம்
காரணம்: நம்மை தவிர இன்னொன்று இருப்பதாக எண்ணுவதால், அதனிடம் ஆசை வருகிறது. இந்த இல்லாமை கோபமாக மாறுகிறது.
மதம்:
முதலில் மனிதனை மிருகமாக இல்லாமல் மனிதனாக ஆக்க வேண்டும். பிறகு அவனைத் தெய்வமாகவே உயர்த்திவிட வேண்டும். இந்த குறிக்கோளுடன் தான் சகல மதங்களும் உண்டாகி இருக்கின்றன.
தன்னைத்தானே அறிவதிலே இது நிறைவேறும்.
நம்மாலே ஆகும்:
எது ஆகும், யாராலும் ஆகும் என்றெல்லாம் நாம் பயந்து கொண்டிருக்க தேவை இல்லை. 'நம்மாலே ஆகும்' என்ற நம்பிக்கைதான் முக்கியமானதாகும்.
இந்த தைரியமும், ஆக்க சக்தியும் மனிதனிடத்தில் என்றும் உண்டு.
அதன் விளைவாக தான் நாம் தவழ்ந்து, பிறகு எழுந்து, நடந்து பின்பு பேசவும் தொடங்கினோம்.
அப்படி என்றால் இப்போது நாம் அதை விட பல மடங்கு மேலாக செயலாறற முடியும்.
மனம்:
'மாறுபட்ட உணர்வுகளே மனத்தின் லயங்கள்'
சில நேரங்களில் நண்பன்,
சில நேரங்களில் பகைவன்.
"மனத்துக்கண் மாசிலன் அதில் அனைத்து அறன்
ஆகுல நீர பிற."
உடம்பு களங்கப் பட்டிருக்கலாம், ஆனால் மனது களங்கப் படாதிருக்குமானால், அந்த உணர்வு கூடப் பரிசுத்தமாக ஆகிவிடுகிறது.
எப்போது மனிதன் தன்னை உணர்ந்து கொண்டு விடுகிறானோ, அப்போது மனது பாடமாகி விடுகிறது.
அப்பொழுது கற்றதையும், அனுபவமாக பெற்றதையும் கொண்டு அடுத்தடுத்து வாழ்வில் முன்னேறி செல்கின்றார்.
"மனத்துக்குள் அடங்கியவனல்ல மநுஷ்யன்! மநுஷ்யனுக்குள் அடங்கியது தான் மனது."
மனது நம் கட்டுப்பாட்டில்இல்லாவிட்டால், விளைவுகள் விபரீதமாக இருக்கும்.
வாழ்க்கை என்பது வாழவே:
"நாம் பிறந்தது ஆண்டவனை எண்ண, அடுத்தவருக்கு உதவ, நியாயமாக வாழ"
"சரி இவ்வளவும் நான் செய்கின்றேன், ஆனால் கஷ்டங்கள் என்னை தேடியே வருகிறது"?
இதுவே பலருக்கும் எழும் கேள்வி..
தீயவர்கள் செழிப்புடன் வாழ்கிறார்கள், நாம் எவ்வளவோ நல்லது செய்தும் , கஷ்டங்கள் அனுபவிக்கிறோமே
என்பதே 99% நம்மில் உண்டாகும் கேள்வி.....
ஆனால் அவ்வாறு தீமை செய்து விட்டு செழிப்புடன் வாழ்ந்தவர்களின் கடைசி காலம் கஷ்டமானதாகவே இருக்கும், அதற்கு சாட்சிகளும், எடுத்துக்காட்டுகளும், நாம் அறிந்தே ஏராளம் உண்டு .
"மனதை உணர்ந்து, மகிழ்ச்சியுடன் வாழவே நாம் இங்கே படைக்கப்பட்டோம்"
நன்றி ❤
-கௌசல்யா சந்திரன்
Comments
Post a Comment
Test