சந்தோஷம்

எவ்வளவு? எங்கே கிடைக்கும்?
 

  ஒரு வேளை இதுவும் ஒரு பொருளாக இருந்தால் அனைவரும் அதை வாங்கி மூட்டை கட்டி வைத்துக் கொள்வோம். 
 
  யாருக்குத்து தெரியும், ஒரு வேளை அதையும் பெண்களுக்கு வரதட்சணையாக கொடுக்க ஆரம்பித்திருப்பார்கள்.

  மற்றவர்களிடம் பகிர, பகிர குறையாமல் கொடுப்பவருக்கும், வாங்குவோருக்கும் அது அதிகரிக்கும் ஒரு அபூர்வ பொக்கிஷம். சந்தோஷம். 
 
  நம் கையில் சந்தோஷம் இருக்கும் வரை அது மிகச் சிறியதாகத் தோன்றுகிறது. அது நம்மை விட்டு விலகிச் சென்ற பின்தான் அது எவ்வளவு பெரியது, விலை மதிப்பற்றது என அறிகிறோம்.

 ஒரு ஒருவருக்கும், ஒரு ஒரு விதங்களில் சந்தோஷம் இருக்கும். அது பொதுவானது அல்ல. 
  வயதாக, வயதாக நாம் நம்மை அறியாமலேயே சிறு பிள்ளைகளை பார்த்து ஏங்க தொடர்கிறோம். மீீண்டும் அந்த பிள்ளை பருவம் கிடைக்காதா! என்று. 
  காரணம்: அன்று நாம் அனைவருமே மகிழ்ச்சியாக தான் இருந்தோம். எதுவுமே இல்லாத நிலையில் கூட, இருப்பதை கொண்டு சந்தோஷமாக இருந்தோம்.
 


  சிரித்துக் கொண்டிருக்கும் முகங்கள் எல்லாம் இங்கே சந்தோஷமாக இருக்கிறது என்று அர்த்தம் இல்லை. 

  உதாரணம்:  நாம் 
  
  சந்தோஷம் என்பது, முழுக்க முழுக்க நம் மன நிலையை பொருத்தது. தனிமையில் இருக்கும்  பொழுது  நம் மன நிலை எப்படி இருக்கிறது? என்பதை பொருத்தே, தீீீர்மானிக்கப்படுகிறது.


சந்தோஷம் சிலருக்கு, 
   * பேசுவதில், 
   * பேசுவதை கேட்பதில், 
  *  தூங்குவதில்,
   * சமைப்பதில்,
   * சாப்பிசாப்பிடுவதில்,
    *நண்பர்கள் உடன் பேசுவதில்,
    *உதவுவதில்,
    *பயணம் செய்வதில்,
    *பயணம் முடிந்து வீட்டிற்குள் நுழைவதில்,
    *மழையை ரசிப்பதில்,
    *மண் வாசனை வருகையில்,அதை நுகர்வதில்,
    *அதிகாலை சூரியன்,  உதிப்பதை காண,
    *மாலையில் சூரியன்,  மறைவதை காண,
    *நிலவின் குளிர் உணர்வதில்.,

என பல விதங்களில், பலருக்கும் சந்தோஷம் வேறுபட்டது.  இது இயற்கையானது. ஆனால் நிலையானது அல்ல. 

  ஒரு சிலர் எங்கு சென்றாலும் சந்தோஷத்தை ஏற்படுத்துவார்கள். 

சந்தோஷம்- சுறுசுறுப்பாக வேலை செய்பவர்களிடம் குடிகொண்டிருக்கிறது. 
  

   மற்றவர்களுக்குச் செய்யும் சேவையே சந்தோஷத்தின் வேர்.

       நம் எல்லா விருந்தினர்களும் 
நமக்கு சந்தோஷத்தையே தருகின்றனர், சிலர் நம்மை விட்டுச் செல்வதால், சிலர் நம்மிடம் வருவதால். 
 
    வாழ்க்கையில் முன் ஜாக்கிரதை உடன் இருப்பது சிறப்பே, ஆனால் அது சந்தோஷத்தை கொடுக்காது.



'நான் விரும்பாத, எனக்கு தேவையில்லாத பல பொருட்கள் உலகத்தில் உள்ளது.'
                                                      -சாக்ரடீஸ்
  நாம் விரும்பும் சில பொருட்கள் நம்மிடம் இல்லாமல் இருப்பது நம் சந்தோஷத்திற்கு முக்கியமானது.


      நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், என்ற எண்ணமே சந்தோஷமானது.

    சந்தோஷம் நம் வாழ்வின் முடிவில் இல்லை. இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில் உள்ளது. 

    நாளை நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால்,  இன்றே சந்தோஷமாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். 
  
  சந்தோஷம் என்பது ஒரு பழக்கம்,  அதை வளர்த்துக் கொள்ளுங்கள். 

    சந்தோஷம் என்பது நம் மன நிலையை பொறுத்தது.
*முட்டாள் தூரத்தில் சந்தோஷத்தை தேடுகிறார்.
*புத்திசாலி தன் காலடியில் சந்தோஷத்தை காண்கிறார்.
 
    நீங்கள் இன்று இருக்கும் நிலையை விட உயர்ந்த நிலையை அடைய, நீங்கள் உங்களையே தியாகம் (உழைப்பதே) செய்வதே சந்தோஷத்திற்கு வழி.

   நன்றி உணர்ச்சி இல்லாதவர்கள் சந்தோஷம் என்னும் வார்த்தையையே மறந்து விடலாம். 
 
  சந்தோஷமாக இருப்பவன், தன்னையும், தன்னை சுற்றி உள்ளவர்களையும் சந்தோஷமாக இருக்க உதவுகின்றான். இதன் மூலம், மனதளவிலும், உடல் அளவிலும் ஆரோக்கியமாக இருக்க முடியும். 

  "தைரியமும், உண்மையும் உள்ள ஒருவன் வீீழ்வதில்லை."

                               நன்றி ❤
                                
                                  - கௌசல்யா சந்திரன் 


    






Comments

Post a Comment

Test

Popular posts from this blog

என் இனிய தனிமையே

யார் நீ?... ஓ நீங்களா?

வறுமை கொடிது